Friday, May 28, 2010

சித்தமெல்லாம் எனக்கு. . .






பித்தாபிறை சூடீபெரு 
    மானேயரு ளாளா 
எத்தான்மற வாதேநினைக் 
    கின்றேன்மனத் துன்னை 
வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் 
    நல்லூரருட் டுறையுள் 
அத்தாஉனக் காளாய்இனி 
    அல்லேனென லாமே..



சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே இறைவா – உன்னை
சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே!
அத்தனில்லாமல் ஒரு அம்மை இல்லை – அந்த
அம்மையில்லாமல் இந்தப் பிள்ளை இல்லை!…
(சித்த)
பக்திப் பெருக்கில் எந்தன் ஊன் உருக – அந்த
பரவசத்தின் உள்ளே உயிர் உருக.
சக்தியெல்லாம் திரண்டு சிவம் பெருக – எந்தன்
சந்ததியே உந்தனுக்கு அடிபணிய, இறைவா!…
(சித்த)
கண்ணைத் திறந்து வைத்த கருப்பொருளே – கோவில்
கதவைத் திறந்தழைத்த திருவருளே
வெண்ணைநல்லூர் உறையும் அருட்கடலே – வந்து
என்னை ஆளுகின்ற பரம்பொருளே, இறைவா!…”
(சித்த)
படம் – திருவருட்செல்வர் – வருடம் 1967
நன்றி: rammalar.wordpress.com

இசைத் தமிழ்..





“இசைத் தமிழ் நீ செய்த அருஞ்சதனை – நீ
இருக்கையிலே எனக்கேன் பெருஞ் சோதனை?
(இசைத்)
வசை வருமே பாண்டி நாட்டினிலே – குழலி
மணவாளனே உனது வீட்டினிலே – வெற்றி..
ஒருவனுக்கோ?…மதுரைத் தமிழனுக்கோ?…
(இசைத்)
சிவலிங்கம் சாட்சி சொன்ன 
கதையும் பொய்யோ? – மாமன்
திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ?…
பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட உன்னை
பேசும் தமிழ் அழைத்தும் வாராதிருப்பதென்ன?
(இசைத்)
தாய்க்கொரு பழிநேர்ந்தால் 
மகற்கில்லையோ? – அன்னைத்
தமிழுக்கும் பழிநேர்ந்தால் உனக்கில்லையோ?
வேருக்கு நீரூற்றி விளைக்கின்ற தலைவா – உன்
ஊருக்குப் பழி நேர்ந்தால் உனக்கனறி எனக்கில்லை!”
(இசைத்)
படம் – திருவிளையாடல் – வருடம் 1965
நன்றி: rammalar.wordpress.com

வாசி வாசியென்று..


“வாசி வாசியென்று வாசித்த தமிழின்று
சிவா சிவாயென சிந்தைதனில் நின்று
அவாவினால் இந்த ஒளவைத் தமிழ் கொண்டு
கவிபாடினான் உன்னைக் கண்குளிரக் கண்டு.
ஒன்றானவன், உருவில் இரண்டானவன்,
உருவான செந்தமிழில் மூன்றானவன்,
நன்றான வேதத்தில் நான்கானவன்,
நமச்சிவாய என் ஐந்தானவன்,
இன்பச் சுவைகளுக்குள் ஆறானவன்
இன்னிசை ஸ்வரங்களில் ஏழானவன்
சித்திக்கும் பொருள்களில் எட்டானவன்
தித்திக்கும் நவரச வித்தானவன்
பத்தானவன், நெஞ்சில் பற்றானவன்
பன்னிருகை வேலவனைப் பெற்றானவன்
முற்றாதவன் மூல முதலானவன்
முன்னைக்கும் பின்னைக்கும் நடுவானவன்
ஆணாகிப் பெண்ணாகி நின்றானவன்
அவையொன்று தானென்று சொன்னானவன்
தான்பாதி உமைபாதி கொண்டானவன்
சரிபாதி பெண்மைக்குத் தந்தானவன்
காற்றானவன்…ஒளியானவன்…
நீரானவன்… நெருப்பானவன்…
நேற்றாகி இன்றாகி எனறைக்கும் நிலையான
ஊற்றாகி நின்றானவன்… அன்பின்
ஒளியாகி நின்றானவன்!”
படம் – திருவிளையாடல் – வருடம் 1965
நன்றி: rammalar.wordpress.com

Wednesday, May 5, 2010

கலைமகள்..




வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்
கொள்ளை இன்பம் குலவு கவிதை
கூறும் பாவலர் உள்ளத்தில் இருப்பாள் (வெள்ளை)

உள்ளதாம் பொருள் தேடி உணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள் நின்று ஒளிர்வாள்
கள்ளமற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத்து உட்பொருள் ஆவாள் (வெள்ளை)

மாதர் தீங்குரல் பாட்டில் இருப்பாள்
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்
கீதம் பாடும் குயிலின் குரலை
கிளியின் நாவை இருப்பிடம் கொண்டாள்
கோதகன்ற தொழில் உடைத்தாகி
குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலிடை உற்றாள்
இன்பமே வடிவாகிடப் பெற்றாள் (வெள்ளை) 


இயற்றியவர்: மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
பாடியவர்: நித்யச்ரி
இராகம்: பிம்ப்ளாஸ்
பாடலைக் கேட்க


நன்றி: குமரன் 

விருப்பம் :)