அருணகிரிநாதரின் சரித்திரத்தில் ஒரு முக்கிய சம்பவம் உண்டு. வில்லிப்புத்தூரார் என்னும் ஸ்ரீவைஷ்ணவர் ஒருவர் தமிழ் வாதுக்கு புலவர்களை அழைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்.
வாதில் தோற்றவர்களின் காதை ஒட்ட அறுத்து, விரட்டி அடித்துவிடுவார். இதனால் பல புலவர்கள் அந்த வட்டாரத்திற்குள்ளும் நுழைய அஞ்சியிருந்தனர். அதை அறிந்த அருணகிரிநாதர் அந்த வழக்கத்தை உடனடியாக நிறுத்தி, புலவர்களைக் காப்பாற்றவேண்டும் என்ற நோக்கம் கொண்டார். ஆகவே வில்லிப்புத்தூராரை நாடிச் சென்றார். அவரையும் வில்லிப்புத்தூரார் வாதுக்கழைத்தார்.
வில்லிப்புத்தூரார் தம்முடைய கையில் நீளமான துரட்டியைப் பிடித்திருப்பார். அதன் ஒரு நுனியில் காதை அறுக்கக்கூடிய பதமான வளைந்த கத்தி இருக்கும். அதை எதிராளியின் காதின் மீது வைத்துக்கொண்டு கேள்விகளைக் கேட்பார். பாடல்களைச் சொல்லச் சொல்வார். ஏதும் வழு இருந்தால் உடனடியாக எட்டினமட்டும் காதை அறுத்துவிடுவார்.
அருணகிரியோ ஒரு புது கண்டிஷனைப் போட்டுவிட்டார். அதாவது இருவர் கையிலும் காதறுக்கும் துரட்டி இருக்கவேண்டும். அருணகிரி ஓர் அந்தாதியைப் பாடுவார். அதில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும்வில்லி அர்த்தம் சொல்லிவிட்டால் போதும். அவ்வாறு சொல்லிவிட்டால் வில்லிப்புத்தூரார் வென்றவர் ஆவார். வென்றவர் எட்டினமட்டும் தோற்றவர் காதை அறுத்துவிடலாம். அப்படி வில்லி பொருள் சொல்லவில்லையென்றால் வில்லியின் காதை அருணகிரி அறுக்கலாம். வில்லியும் ஒத்துக்கொண்டார்.
வாதத்தை வளர்த்துச் செல்லவிரும்பாத அருணகிரி, ஒரு பாடலைத் தாமே சொல்லி, அதன் பொருளைக் கேட்டார். வில்லிப்புத்தூரார் விதிர்த்துப்போய் அமர்ந்துவிட்டார். ஏனெனில் அந்தப் பாடல் தலையும் புரியவில்லை; காலும் புரியவில்லை.
அது ஒரு “தகரவர்க்க”ப் பாடல். முற்றிலும் “த” என்னும் எழுத்தின் வரிசையிலேயே இந்தப் பாடல் முழுமையும் அமைந்திருக்கும். சமஸ்கிருதத்திலும் தெலுங்கிலும் இவ்வகைப்பாடல்கள் உண்டு. “ஏகாக்ஷரப் பாடல்” என்று சொல்வார்கள். தமிழில் ககரவர்க்கம், தகரவர்க்கம் ஆகியவற்றில் பாடல்கள் உண்டு. காளமேகப்புலவர், அருணகிரிநாதர் முதலியோர் பாடியிருக்கின்றனர்.
வில்லிப்புத்தூரார் தம்முடைய தோல்வியை ஒப்புக்கொண்டு, தம் காதை அறுத்துக்கொள்ளுமாறு அருணகிரியிடம் கேட்டுக்கொண்டார். அருணகிரியோ அது தம்முடைய நோக்கமல்ல என்றும் புலவர்களை இவ்வாறு அவமதித்து அவர்களுக்குக் கொடுமை செய்வதை நிறுத்தச் செய்யவேண்டும் என்பதே விருப்பம் என்றும் சொல்லிவிட்டார். வில்லிப்புத்தூரார் அருணகிரியிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு தாம் இனி தமிழை வளர்க்கப் பாடுபடப் போவதாக வாக்குறுதி கொடுத்தார். பின்னாட்களில் அவர் தமிழில் மகாபாரதத்தைப் பாடினார். அந்த நூல் அவருடைய பெயராலேயே ‘வில்லி பாரதம்’ என்று வழங்குகிறது.
பாடலைப் பார்ப்போம்: “திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே” இதன் பொருளை திருமுருக கிருபாநந்தவாரியார் சுவாமிகள் இவ்வாறு கொடுக்கிறார். திதத்தத் தத்தித்த – “திதத்தத் தத்தித்த” என்னும் தாளமானங்களை, திதி – திருநடனத்தால் காக்கின்ற தாதை – பரமசிவனும் தாத – பிரமனும் துத்தி – படப்பொறியினையுடையதத்தி – பாம்பினுடைய தா – இடத்தையும் தித – நிலைபெற்று தத்து – ததும்புகின்ற அத்தி – சமுத்திரத்தையும் பாயலாகக்கொண்டு ததி – தயிரானது தித்தித்ததே – தித்திக்கின்றதென்று து – உண்ட கண்ணனும் துதித்து – துதி செய்து வணங்குகின்ற இதத்து – பேரின்ப சொரூபியான ஆதி – முதல்வனே! தத்தத்து – தந்தத்தையுடைய அத்தி – அயிராவதம் என்னும் யானையால் வளர்க்கப்பட்ட தத்தை – கிளி போன்ற தெய்வயானைக்கு தாத – தொண்டனே! தீதே – தீமையே துதை – நெருங்கிய தாது – சப்த தாதுக்களால் நிறைந்ததும் அதத்து – மரணத்தோடும் உதி – ஜனனத்தோடும் தத்தும் – பல தத்துக்களோடும் அத்து – இசைவுற்றதுமான அத்தி – எலும்புகளை மூடிய தித்தி – பையாகிய இவ்வுடல் தீ – அக்கினியினால் தீ – தகிக்கப்படுகின்ற திதி – அந்நாளிலே துதி – உன்னைத் துதிக்கும் தீ – புத்தி தொத்தது – உனக்கே அடிமையாகவேண்டும்
இப்பாடல் கந்தர் அந்தாதியின் 54 ஆவது பாடல். இதில் “திதத்தத்தத்” என்பது நான்கு அடிகளிலும் திருப்பித்திருப்பி வருகிறது. இதனை “மடக்கு” அல்லது “யமகம்” என்று சொல்வார்கள்.முதற்பாடலின் கடைச்சொல்லும் அடுத்தபாடலின் முதற்சொல்லும் ஒன்றாக இருக்கும். ஆகவே அக்காப்பிய வகையை “அந்தாதி” என்று சொல்வார்கள். கந்தர் அந்தாதியில் மேலும் சில பாடல்கள் – தெரிந்துகொள்ளவேண்டியவை இருக்கின்றன.
உலக மொழிகளிலே தமிழில் இருக்கும் அத்தனை விந்தைகள் வேறெந்த மொழியிலும் இருக்கக் காணோம்.
நன்றி: திரு.வாஞ்சீஸ்வரன் கோபால் (ponniyinselvan@yahoogroups.com)
|
Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts
Sunday, May 13, 2012
அருணகிரி நாதரின் “தகரவர்க்க”ப் பாடல்
குறிச்சொற்கள்:
அருணகிரி நாதர்,
கவிதை,
சிவாரமுதப் பாக்கள்,
முருகன்
Thursday, April 12, 2012
இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!

காலத்து முன் தோன்றிய மூத்தவன்
உணவுக்கு உழவையும், உடைக்கு நெசவையும்,
உலகுக்கு நாகரீகத்தையும் கற்றுக் கொடுத்தவன்
கடல் கடந்து கடாரம் சென்று ஆட்சி செய்தவன்.
கற்களை கலை வண்ணமாக்க
கலைக்கு சங்கம் வைத்தவன்.
மனுநீதியை காத்த மானுடன்
மக்களுக்காக தன்னுயிர் தந்தவன்;
மக்களாட்சி முறையை முதன் முதலாக நடத்தியவன்.
அகிலத்தின் முதல் அணையைக் கட்டியவன;
அணுவைப் பிளக்க முடியும் என்றவன்;
மொழிக்கு முதல் இலக்கணத்தை வகுத்தவன்,
கையிலே வாளேந்தி, நெஞ்சிலே பயமிழந்து,
சுற்றி வந்த பகைவர் கூட்டத்தை கையேந்த வைத்து,
அகில உலகத்தையும் வியக்கச் செய்தவன்,
பிறந்த குழந்தை இறந்து பிறந்தால்
வாளால் கீறி புதைத்தவன்;
மார்பிலே புண்ணேந்தி தன்(இன)மானமே
பெரிதென மரணத்தை மிரட்டியவன்
மானமே பெரிதென, கற்பே உயிரென,
ஒழுக்கமே நெறியென ,
அன்பே கடவுளென வாழ்ந்தவன்
வந்தாரையெல்லாம் வாழவைத்தவன்
வாரி வாரி இறைத்தவன்,
முல்லைக்கும் தேர்தந்த இனமவன்
வாழ்க்கைமுறையை உலகுக்கு உணர்த்தியவன்.
உலகத்துக்கே வழிகாட்டியவன் நம் தமிழன்!
தமிழனாய் பிறந்ததில் கர்வம் கொள்வோம்
தமிழுக்கு மேலுமொரு புதிய சரித்திரத்தைப் படைப்போம்..!
தமிழனாய் வாழ்வோம்!
தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடுவோம்!!
நன்றி: பூர்விகா பிரசுர விளம்பரம்.
Sunday, April 10, 2011
தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!
தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!
காலத்து முன் தோன்றிய மூத்தவன்
உணவுக்கு உழவையும், உடைக்கு நெசவையும்,
உலகுக்கு நாகரீகத்தையும் கற்றுக் கொடுத்தவன்
கடல் கடந்து கடாரம் சென்று ஆட்சி செய்தவன்.
கற்களை கலை வண்ணமாக்க
கலைக்கு சங்கம் வைத்தவன்.
மனுநீதியை காத்த மானுடன்
மக்களுக்காக தன்னுயிர் தந்தவன்;
மக்களாட்சி முறையை முதன் முதலாக நடத்தியவன்.
அகிலத்தின் முதல் அணையைக் கட்டியவன;
அணுவைப் பிளக்க முடியும் என்றவன்;
மொழிக்கு முதல் இலக்கணத்தை வகுத்தவன்,
கையிலே வாளேந்தி, நெஞ்சிலே பயமிழந்து,
சுற்றி வந்த பகைவர் கூட்டத்தை கையேந்த வைத்து,
அகில உலகத்தையும் வியக்கச் செய்தவன்,
பிறந்த குழந்தை இறந்து பிறந்தால்
வாளால் கீறி புதைத்தவன்;
மார்பிலே புண்ணேந்தி தன்(இன)மானமே
பெரிதென மரணத்தை மிரட்டியவன்
மானமே பெரிதென, கற்பே உயிரென,
ஒழுக்கமே நெறியென ,
அன்பே கடவுளென வாழ்ந்தவன்
வந்தாரையெல்லாம் வாழவைத்தவன்
வாரி வாரி இறைத்தவன்,
முல்லைக்கும் தேர்தந்த இனமவன்
வாழ்க்கைமுறையை உலகுக்கு உணர்த்தியவன்.
உலகத்துக்கே வழிகாட்டியவன் நம் தமிழன்
தமிழனாய் பிறந்ததில் கர்வம் கொள்வோம்
தமிழுக்கு மேலுமொரு புதிய சரித்திரத்தைப் படைப்போம்..!
தமிழனாய் வாழ்வோம்
தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடுவோம்!!
நன்றி: பூர்விகா பிரசுர விளம்பரம்.
Sunday, March 20, 2011
திருவாசகத் தேன் தந்த பெருவள்ளல்
திருவாசகத் தேன் தந்த பெருவள்ளல்
வான் கலந்த மாணிக்க வாசக! நின் வாசகத்தை
நான் கலந்து பாடுங்கால்: நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன் கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்து
ஊன் கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே
என்று அருட்ஜோதி இராமலிங்க வள்ளலாரால் உருகி உருகிப் பாராட்டப்பெறும் உயர்வாளர் மாணிக்கவாசகர்.
நான் கலந்து பாடுங்கால்: நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன் கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்து
ஊன் கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே
என்று அருட்ஜோதி இராமலிங்க வள்ளலாரால் உருகி உருகிப் பாராட்டப்பெறும் உயர்வாளர் மாணிக்கவாசகர்.
தொல்லையிரும்பிறவிச் சூழும் தளை நீக்கி
அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே –எல்லை
மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசகம் என்னும் தேன்
அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே –எல்லை
மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசகம் என்னும் தேன்
என்று திருவாசகம் பாடப்படும் இடம் எங்கும் போற்றித் துதிக்கப்படும் அருளாளர் திருவாதவூரர் என்ற மாணிக்கவாசகப் பெருமான். இப்பெருமானின் குருபூஜைத் தினமான ஆனிமகத் திருநாள் தமிழர்கள் யாவரும் போற்றவேண்டிய நன்னாளாகும்.........மேலும் படிக்க..
Sunday, March 6, 2011
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா (கண்ணன் பாட்டு)
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமேசின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே
என்னைக் கலி தீர்த்தே உலகில்
என்னைக் கலி தீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா சின்னஞ்சிறு கிளியே
பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா பேசும் பொற்சித்திரமே
பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா பேசும் பொற்சித்திரமே
அள்ளி அணைத்திடவே என் முன்னே
அள்ளி அணைத்திடவே என் முன்னே ஆடி வரும் தேனே
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா சின்னஞ்சிறு கிளியே
ஓடி வருகையிலே கண்ணம்மா உள்ளம் குளிருதடி
ஓடி வருகையிலே கண்ணம்மா உள்ளம் குளிருதடி
ஆடித் திரிதல் கண்டால் உன்னைப் போய்
ஆடித் திரிதல் கண்டால் உன்னைப் போய் ஆவி தழுவதடி
உச்சி தன்னை முகர்ந்தால் கருவம் ஓங்கி வளருதடி
உச்சி தன்னை முகர்ந்தால் கருவம் ஓங்கி வளருதடி
மெச்சி உன்னை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி
மெச்சி உன்னை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி
கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி
கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி
கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி
உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்தமாகுதடி
உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்தமாகுதடி
உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணில் பாவையன்றோ கண்ணம்மா
என் கண்ணில் பாவையன்றோ கண்ணம்மா என்னுயில் நின்னதன்றோ?
- மஹாகவி சுப்ரமணிய பாரதியார்
Subscribe to:
Posts (Atom)
