யாதும் ஊரே யாவரும் கேளிர்
(கணியன் பூங்குன்றனார்)

திணை: பொதுவியல் துறை -பொருண்மொழிக் காஞ்சி
யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;
தீதும் நன்றும் பிறர்தர வாரா ;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;
சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
நன்றி: http://entamilkavithaigal.blogspot.com/2009/12/blog-post_4501.html
விளக்கம்:
யாதும் ஊரே,யாவரும் கேளிர்;
-எல்லா ஊரும் எங்கள் ஊர்தான், எல்லோரும் எங்கள் உறவுகள் தான்;
தீதும், நன்றும், பிறர் தர வாரா;
-தீயது, நல்லது என்பவை பிறர் தந்து வருபவை இல்லை;
நோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன;
-துன்பமும், அதன் தீர்வும் கூட அதுபோல் தான்.
சாதலும் புதுவது அன்றே! வாழ்தல்
-செத்துப் போவது ஒன்றும் புதியது இல்லை.
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின்
-வாழ்க்கை இனியது என்று சொல்லி மகிழ்ச்சிப் படுவதும் தவறு.
இன்னாது என்றலும் இலமே! மின்னொடு
-மாறி, வாழ்க்கையில் இருந்து விலகி ஏற்கும் துறவு கொடியது என்று சொல்லுவதும் தவறு;
வானம் தண் துளி தலைஇ ஆனாது,
-வானம், மின்னல் வெட்டும் மழையாய் குளிர்ந்த துளிகளைப் பெய்ய,
கல்பொருது இரங்கும், மல்லல் பேர்யாற்று
-கல், மண் ஆகியவற்றைப் புரட்டிக் கொண்டு இறங்கி, பெருகி வரும் ஆற்று நீரில் சிக்கி,
நீர்வழிப் படூஉம் புனை போல், ஆருயிர்
-அதன் தடத்திலே போகும் புனையைப் [மிதவை (அ) சிறு படகு] போல, அரிய உயிரியக்கம் ஆனது
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
-முன்னர் இட்ட முறைவழியே போகத் தான் செய்யும் (நியதி வழிப் படும்) என்று வாழ்க்கையின் திறம் அறிந்தவர்கள் சொல்லுவார்கள்.
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியில்
-அந்த காட்சியில் நாங்கள் தெளிந்தோம் ஆகையால், [இந்தப் பேருண்மையைக் கண்டு அனுபவத்தால் தெளிவு பெற்றோம் ஆகையால்]
பெரியோரை வியத்தலும் இலமே!
-பெரியவர்களைக் கண்டு வியத்தலும் தவறு; [அறிவிலோ செல்வத்திலோ பிறப்பிலோ நம்மை விடவும் மேலானவரைக் கண்டு போற்றித் துதித்தலும் செய்யோம்.]
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!
-சிறியவர்களை இகழ்தல் அதனிலும் தவறு. [நம்மை விடவும் கீழானவரைக் கண்டு சிறுமையாய் நடத்துதலை எண்ணவும் மாட்டோம்.]
நன்றி: http://vasantruban.blogspot.com/2012/03/blog-post.html?spref=bl

YENNAI MANITHANAGA MATRIYATHARKKU NANTRIGAL
ReplyDelete
ReplyDeleteநன்று
அருமையான பௌத்தக்கருத்துகள்! சங்க அறணான சங்கரன் புகழ் வாழ்க!
ReplyDeleteநன்றி
ReplyDeleteசிறந்த விளக்கம்
ReplyDeleteசிறந்த விளக்கம்!! இங்கே குறிப்பிடப்படும் வாழ்க்கை நியதி என்பது விதியா? அல்லது எப்படி பொருள்கொள்வது? நன்றி!
ReplyDeleteThe philosophy that is proclaimed here is that :everything that happens in life is just random. Take it as it comes.
Deleteமுனிவின் does not mean tuRavu here as you mention. "muni" means anger too. So the whole meaning for the two lines is: We do not say life is pleasant nor in a fit say life is full of misery. In your interpretation, you say first "we don't say life is pleasant" and follow it up with "we don't say tuRavu (renunciation) is miserable", That is not the intent of the poet. He says, "we do not celebrate life not do we denigrate it. We take it as it comes"
ReplyDeleteDear Mr. Sethu, I am astonished to see the clarity of your reply. Please...get in touch...ramu_swamy@yahoo.com
Deleteமுனிவு muṉivu (p. 3309)
Deleteமுனிவு muṉivu , n. முனி-. [K. munipu, M. munivu.] 1. Anger, wrath; கோபம். முனிவு தீர்ந்தேன் (கம்பரா. வருண. 82). 2. Dislike, aversion; வெறுப்பு. (தொல். சொல். 386.) 3. Fatigue; களைப்பு. 4. Suffering; வருத்தம். முனிவிகந்திருந்த . . . இரவல (சிறுபாண்
அருமையான விளக்கம் தந்தமைக்கு நன்றி.
ReplyDeleteஅருமை
ReplyDeleteதமிழ் ( நம்முடைய ) முகவரியை காலம் கடந்து தெறிந்து கொள்கிறோம் பத்திரப்படுத்தி அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் நேரம்
ReplyDeleteஅருமையான கருத்து
ReplyDeleteVera level
ReplyDeleteArumaii
ReplyDeleteஅருமை
ReplyDeleteமிக்க நன்றி
ReplyDeleteமிக்க நன்றி
ReplyDelete