ஆறாம் திருமுறை - திருநாவுக்கரசர் தேவரம்

பொது - பாடல் எண் : 3
ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே
அடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே
ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே
உருகு வித்தால் ஆரொருவர் உருகா தாரே
பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே
பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே
காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே
காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே.
அடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே
ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே
உருகு வித்தால் ஆரொருவர் உருகா தாரே
பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே
பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே
காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே
காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே.
பொழிப்புரை :
கண்ணுதலாய்! நீ ஆட்டுவித்தால் ஆடாதார் ஒருவர் ஆர்? அடக்குவித்தால் அடங்காதார் ஒருவர் ஆர்? ஓட்டு வித்தால் ஓடாதார் ஒருவர் ஆர்? உருகுவித்தால் உருகாதார் ஒருவர் யார்? பாட்டுவித்தால் பாடாதார் ஒருவர் யார்? பணிவித்தால் பணியாதார் ஒருவர் ஆர்? காட்டுவித்தால் காணாதார் ஒருவர் ஆர்? நீ காட்டாவிடில் காண்பார் ஆர்?
அருமையான அப்பரின் பாடல்.நன்றி
ReplyDeleteஇந்தப்பாடலை அப்படிய ஓரளவு கையாண்டு அதை, வைணவக் கடவுளர் மீது சாற்றி "ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே #கண்ணா என்று மாற்றி கண்ணதாசன் எழுதி திரைப்படம் ஒன்றிலும் அஃதிடம் பெற்றது !.
ReplyDeleteமனதிற்கு நம்பிக்கைதரும் பாடல். அவன் ஆட்டுகிறான் நாம் ஆடுகிறோம். அவன் நினைத்தால் எம்மை பாடவும் வைப்பான், உருகவும் வைப்பான் . பணியவும் வைப்பான். அவனையே நம்பும் எனக்கு உமக்கும் எதுக்கு மனக்கவலை
ReplyDelete