Saturday, April 27, 2013

சிவபெருமான் போற்றிகள் 1276 - பகுதி 4 - (901-1100)



முதற்கண் நன்றி: https://www.facebook.com/thirumarai

ஓம் பழையாறை வடதளியாய் போற்றி
ஓம் பழையோய் போற்றி புதியோய் போற்றி
ஓம் பள்ளப் பரவை நஞ்சுண்டாய் போற்றி
ஓம் பள்ளிமுக் கூடற் பரனே போற்றி
ஓம் பற்றியுலகினை விடாதாய் போற்றி
ஓம் பற்றினார் பற்றினைப் பறிப்பாய் போற்றி
ஓம் பற்றை அறுக்கும் கொற்றவா போற்றி
ஓம் பனந்தாள் தாடகேச் சரணே போற்றி
ஓம் பனிமதி சூடுசெஞ் சடையோய் போற்றி
ஓம் பாகம் பெண்ணுரு ஆனோய் போற்றி 910

ஓம் பாங்கார் பழனத் தழகா போற்றி
ஓம் பாங்கார் பழனத் தழகா போற்றி
ஓம் பாச்சிலாச் சிராமப் பரனே போற்றி
ஓம் பாசுபதம் பார்த்தற்கு அளித்தாய் போற்றி
ஓம் பாசூர் அமர்ந்த பசுபதீ போற்றி
ஓம் பாடகம் ஒலிப்ப ஆடுவாய் போற்றி
ஓம் பாட்டான நல்ல தொடையாய் போற்றி
ஓம் பாடலின் ஆடலின் பண்பா போற்றி
ஓம் பாடியாடும் பத்தர்க் கனியாய் போற்றி
ஓம் பாடுவார் நாவில் ஆடுவாய் போற்றி 920

ஓம் பாடுவார் பசியினைத் தீர்ப்பாய் போற்றி
ஓம் பாடுவார் பாடல் உகப்பாய் போற்றி
ஓம் பாண்டவரிற் பார்த்தனுக்குப் பரிந்தாய் போற்றி
ஓம் பாண்டி மாதேவிக்கு அருளினோய் போற்றி
ஓம் பாண்டிக் கொடுமுடிப் பழையோய் போற்றி
ஓம் பாதாளீச்சரப் பரமா போற்றி
ஓம் பாதி மாது பரமா போற்றி
ஓம் பாதிரிப் புலியூர்ப் பரம போற்றி
ஓம் பாம்பும் மதியும் அணிந்தாய் போற்றி
ஓம் பாம்புர நன்நகர்ப் பரமனே போற்றி 930

ஓம் பார்க்கின்ற உயிரே போற்றி போற்றி
ஓம் பார்முழுதும் ஆய பரமா போற்றி
ஓம் பாராகிப் பௌவம் ஏழானாய் போற்றி
ஓம் பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி
ஓம் பாரோடு விண்ணும் ஆனாய் போற்றி
ஓம் பாரோர் விண்ணேத்தப் படுவாய் போற்றி
ஓம் பால விருத்தணும் ஆனோய் போற்றி
ஓம் பால்வண்ணநாதா போற்றி போற்றி
ஓம் பாலாரும் மொழிமடவாள் பாகா போற்றி
ஓம் பாவிப்பார் பாசம் அறுப்பாய் போற்றி 940

ஓம் பிச்சாடல் பேயொடு உகந்தாய் போற்றி
ஓம் பிண்டத்தைக் காக்கும் பிரானாய் போற்றி
ஓம் பிணியுடைய அடியாரைத் தீர்ப்பாய் போற்றி
ஓம் பித்தா பிறைசூடி பெருமானே போற்றி
ஓம் பிரமற்குப் பிரானே போற்றி போற்றி
ஓம் பிரமன்தன் சிரமரிந்த பெரியோய் போற்றி
ஓம் பிழைப்பன பொறுக்கும் பெரியோய் போற்றி
ஓம் பிறப்பிடும்பை சாக்காடொன்று இல்லாய் போற்றி
ஓம் பிறர்க்கென்றும் காட்சிக்கு அரியாய் போற்றி
ஓம் பிறவாமை காக்கும் பெரும போற்றி 950

ஓம் பிறவி யறவி இலாதாய் போற்றி
ஓம் பிறவி யறுத்திடும் பிரானே போற்றி
ஓம் புகலூர் மேவிய புண்ணியா போற்றி
ஓம் புகலூர் வர்த்தமானீச்சரா போற்றி
ஓம் புகழப் பேரொளியாய் நின்றாய் போற்றி
ஓம் புகழேயல்லாது பழியிலான் போற்றி
ஓம் புடைசூழத் தேவர் குழாத்தாய் போற்றி
ஓம் புண்ணியப் பயனே போற்றி போற்றி
ஓம் புண்ணியம் புரியும் திண்ணியோய் போற்றி
ஓம் புண்ணியர் போற்றும் பொருளே போற்றி 960

ஓம் புண்ணியனே தெள்ளியனே போற்றி போற்றி
ஓம் புணர்ச்சிப் பொருளாகி நின்றாய் போற்றி
ஓம் புத்தேளிர் போற்றும் பொருளே போற்றி
ஓம் புந்தியொன்றினோர்ப் பொருளே போற்றி
ஓம் புயங்கப் பெருமான் போற்றி போற்றி
ஓம் புரம்பல வெரித்த புராண போற்றி
ஓம் புராண காரண போற்றி போற்றி
ஓம் புலவர்க் கருளும் பெம்மான் போற்றி
ஓம் புலன்விளை வினைகள் போக்குவாய் போற்றி
ஓம் புலித்தோல் ஆடைக் குழகா போற்றி 970

ஓம் புலிமுலை புல்வாய்க்கு அருளினை போற்றி
ஓம் புறம்பயப் பதிவாழ் புண்ணியா போற்றி
ஓம் புறவார் பனங்காட்டூரா போற்றி
ஓம் புற்றின் அரவம் புனைந்தாய் போற்றி
ஓம் புனலைச் சடையில் புனைந்தோய் போற்றி
ஓம் புனிதனே இராம நாதனே போற்றி
ஓம் பூங்கொன்றைத் தாரொன் றணிந்தாய் போற்றி
ஓம் பூதகணம் புடைசூழ வருவாய் போற்றி
ஓம் பூதங்கள் ஆய புராண போற்றி
ஓம் பூதப் படையாள் புனிதா போற்றி 980

ஓம் பூதப் படையுடையாய் போற்றி போற்றி
ஓம் பூந்துருத்தி நெய்த்தானம் மேயாய் போற்றி
ஓம் பூமகள் நாயகா போற்றி போற்றி
ஓம் பூம்புகார்ச் சாய்க்காடு புகுந்தாய் போற்றி
ஓம் பூமலரான் ஏத்தும் புனிதா போற்றி
ஓம் பூரண முதலே சிவனே போற்றி
ஓம் பூவண நாதா போற்றி போற்றி
ஓம் பூவனூர்ப் புனிதநின் பொன்னடி போற்றி
ஓம் பூவார்ந்த சென்னிப் புனிதா போற்றி
ஓம் பூவில் மணமாய்ப் பிறப்பாய் போற்றி 990

ஓம் பூவின் நாயகா போற்றி போற்றி
ஓம் பெண்ணா கடத்துப் பெரும போற்றி
ஓம் பெண்ணுருவோடு ஆணுருவாய் நின்றாய் போற்றி
ஓம் பெண்மடந்தைத் தோளா போற்றி போற்றி
ஓம் பெயராதென் சிந்தை அமர்ந்தாய் போற்றி
ஓம் பெரியதோர் மலைவில்லா எய்தாய் போற்றி
ஓம் பெரியாய் போற்றி பிரானே போற்றி
ஓம் பெரியோய் போற்றி புனிதா போற்றி
ஓம் பெருகாமே வெள்ளந் தவிர்த்தாய் போற்றி
ஓம் பெருகி யலைக்கின்ற ஆறே போற்றி 1000

ஓம் பெருநெறி மேவும் அருளே போற்றி
ஓம் பெரும்புலியூர்ப்பெரு மானே போற்றி
ஓம் பெருமைக்குரிய இறைவா போற்றி
ஓம் பெருவினை இயற்றும் பெரும போற்றி
ஓம் பெருவேளூருறை பெரும போற்றி
ஓம் பெற்றம் ஊர்ந்த கொற்றவா போற்றி
ஓம் பேசுவார்க்கு எல்லாம் பெரியாய் போற்றி
ஓம் பேணு பெருந்துறைப் பெம்மான் போற்றி
ஓம் பேர்நந்தி யென்னும் பெயராய் போற்றி
ஓம் பேரா யிரமுடைப் பெம்மான் போற்றி 1010

ஓம் பேராகி எங்கும் பரந்தாய் போற்றி
ஓம் பேராதென் சிந்தையிருந்தாய் போற்றி
ஓம் பேராநோய் பேர விடுப்பாய் போற்றி
ஓம் பேரிலும் பெரியன் நீயே போற்றி
ஓம் பேரெயில் பெருமநின் பெய்கழல் போற்றி
ஓம் பைகிளரும் நாகம் அசைத்தாய் போற்றி
ஓம் பைஞ்ஞீலி அண்ணல்நின் பாதம் போற்றி
ஓம் பைய வினைகள் பறிப்பாய் போற்றி
ஓம் பையாடு அரவத் தணியாய் போற்றி
ஓம் பொங்கரவா அழகியனே போற்றி போற்றி 1020

ஓம் பொங்கும் ஞானம் புரிவாய் போற்றி
ஓம் பொய்ச்சார் புரமூன்றும் எய்தாய் போற்றி
ஓம் பொய்சேர்ந்த சிந்தை போகாய் போற்றி
ஓம் பொய்ம்மொழிப் பொருளைப் பொடிப்பாய் போற்றி
ஓம் பொய்யா நஞ்சுண்ட பொறையே போற்றி
ஓம் பொய்யில்லாத மனத்தாய் போற்றி
ஓம் பொருந்தும் மானம் காப்பாய் போற்றி
ஓம் பொருப்பமர் பூவணத் தரனே போற்றி
ஓம் பொருப்பமர் பூவணத் தரனே போற்றி
ஓம் பொருளாக என்னையாட் கொண்டாய் போற்றி 1030

ஓம் பொறிவாயில் ஐந்தவித்தான் போற்றி போற்றி
ஓம் பொறையுடைய பூமிநீர் ஆனோய் போற்றி
ஓம் பொன்னார் மேனி அண்ணா போற்றி
ஓம் பொன்னியல் கொன்றை பூண்பாய் போற்றி
ஓம் பொன்னியலும் திருமேனி <உடையாய் போற்றி
ஓம் பொன்னியலும் மேனியனே போற்றி போற்றி
ஓம் பொன்னொத்த திருமேனிப் புனிதா போற்றி
ஓம் போகாதென் னுள்ளத் திருந்தாய் போற்றி
ஓம் போகாதென் நெஞ்சம் ஆள்வாய் போற்றி
ஓம் போற்றுவார் பாடல் புனைவாய் போற்றி 1040

ஓம் மஞ்சா போற்றி மணாளா போற்றி
ஓம் மடலவிழ் கொன்றை மாலையோய் போற்றி
ஓம் மணஞ்சேரி வார்சடை மணாளா போற்றி
ஓம் மண்ணாய் வளர்வாய் போற்றி போற்றி
ஓம் மண்ணிடை அடியார்க் காப்பாய் போற்றி
ஓம் மண்ணிப்படிக்கரை மணியே போற்றி
ஓம் மண்ணில் நிலவும் மன்னா போற்றி
ஓம் மண்துளங்க ஆடல் மகிழ்ந்தாய் போற்றி
ஓம் மணியுடைய மாநாகம் ஆர்ப்பாய் போற்றி
ஓம் மணியொலி சங்கொலி அணிவாய் போற்றி 1050

ஓம் மதகரி உரித்தாய் போற்றி போற்றி
ஓம் மதயானை ஈருரிவை போர்த்தாய் போற்றி
ஓம் மதுரனே போற்றி மணாளனே போற்றி
ஓம் மந்திர மாமலை மேயோய் போற்றி
ஓம் மந்திரத்தை மனத்துள்ளே வைத்தாய் போற்றி
ஓம் மந்திரம் தந்திரம் ஆனோய் போற்றி
ஓம் மயிலாடுந்துறை மணியே போற்றி
ஓம் மயிலைக் கபாலீச் சரத்தாய் போற்றி
ஓம் மயிலையம்பதி மணியே போற்றி
ஓம் மயேந்திரப் பள்ளி மன்னா போற்றி 1060

ஓம் மருகற் பெருமநின் மலரடி போற்றி
ஓம் மருவிய கருணை மலையே போற்றி
ஓம் மருவியே சிந்தை புகுந்தாய் போற்றி
ஓம் மலங்கெட அருளும் மன்னே போற்றி
ஓம் மலைநாடுடைய மன்னே போற்றி
ஓம் மலைமகள் கொழுந போற்றி போற்றி
ஓம் மலைமகள் மணாளா போற்றி போற்றி
ஓம் மலையாய் நிலைப்பாய் போற்றி போற்றி
ஓம் மலையான் மடந்தை மணவாளா போற்றி
ஓம் மலையான் மடந்தை மணாளா போற்றி 1070

ஓம் மழபாடி வயிரத் தூணே போற்றி
ஓம் மழவிடையாய் நின்பாதம் போற்றி போற்றி
ஓம் மறவா மக்களை மதியாய் போற்றி
ஓம் மற்றெவர் மனத்தும் மகிழ்வாய் போற்றி
ஓம் மற்றொருவர் ஒப்பில்லா மைந்தா போற்றி
ஓம் மறியேந்து கையானே போற்றி போற்றி
ஓம் மறுதலை நோய்கள் அறுப்போய் போற்றி
ஓம் மறைக்கண் ணொளியாய் போற்றி போற்றி
ஓம் மறைக்காடுறையும் மணாளா போற்றி
ஓம் மறைதரும் பொருளே போற்றி போற்றி 1080

ஓம் மறையாய் ஒலிக்கும் மணியே போற்றி
ஓம் மறையுடைய வேதம் விரித்தாய் போற்றி
ஓம் மறையோர் கோல நெறியே போற்றி
ஓம் மன்னா போற்றி மறைவலா போற்றி
ஓம் மன்னிய திருவருண் மலையே போற்றி
ஓம் மன்னிய மங்கை மணாளா போற்றி
ஓம் மன்னியசீர் மறைநான்கும் ஆனோய் போற்றி
ஓம் மன்னியென் சிந்தை இருந்தாய் போற்றி
ஓம் மன்னும் நிலையுடை மறையே போற்றி
ஓம் மன்னே போற்றி மாமணி போற்றி 1090

ஓம் மாகமடை மும்மதிலும் எய்தாய் போற்றி
ஓம் மாகறல் வாழும் மருந்தே போற்றி
ஓம் மாசிலா மணியே போற்றி போற்றி
ஓம் மாட்சி பெரிதும் உடையாய் போற்றி
ஓம் மாணிக்க நாதா போற்றி போற்றி
ஓம் மால்கடலும் மால்விசும்பும் ஆனோய் போற்றி
ஓம் மால்செய்ராமேச வாழ்வே போற்றி
ஓம் மாலட்சுமி நாதா போற்றி போற்றி
ஓம் மால்யானை மத்தகத்தைக் கீண்டாய் போற்றி
ஓம் மால்வரை போற்றி மாதவ போற்றி 1100

திருச்சிற்றம்பலம்

சிவபெருமான் போற்றிகள் 1276 - பகுதி 1 - (1-300)

விருப்பம் :)