Saturday, April 27, 2013

சிவபெருமான் போற்றிகள் 1276 - பகுதி 5 - (1101-1276)



முதற்கண் நன்றி: https://www.facebook.com/thirumarai


ஓம் மாலுக்கோர் ஆழி ஈந்தாய் போற்றி
ஓம் மாலை எழுந்த மதியே போற்றி
ஓம் மாலை எழுந்த மதியே போற்றி
ஓம் மாலைமகிழ்ந்து ஒருபால் வைத்தாய் போற்றி
ஓம் மாற்பேறாள்உமை மணாளா போற்றி
ஓம் மாற்றறி வரதா போற்றி போற்றி
ஓம் மானக் கயிலை மலையாய் போற்றி
ஓம் மான்தோல் உடையா மகிழ்ந்தாய் போற்றி
ஓம் மானேர் நோக்கி மணாளா போற்றி
ஓம் மிக்கார்கள் ஏத்தும் விளக்கே போற்றி 1110

ஓம் மின்னார் உருவ விகிர்தா போற்றி
ஓம் மின்னியலும் வார்சடையெம் பெருமா போற்றி
ஓம் மீயச் சூரிளங் கோயிலாய் போற்றி
ஓம் மீயச் சூருறை விண்ணவ போற்றி
ஓம் மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி
ஓம் முக்கணன் என்னும் முனிவா போற்றி
ஓம் முக்கணா போற்றி முதல்வா போற்றி
ஓம் முடித்தாமரை அணிந்த மூர்த்தி போற்றி
ஓம் முடியடி தெரியா முதலே போற்றி
ஓம் முண்டீச் சரத்து முதல்வா போற்றி 1120

ஓம் முத்தமிழும் நான்மறையும் ஆனோய் போற்றி
ஓம் முத்தனைய முகிழ்முறுவல் உடையாய் போற்றி
ஓம் முத்தா போற்றி முதல்வா போற்றி
ஓம் முத்தியர் உவக்கும் உத்தம போற்றி
ஓம் முத்தியான முதலே போற்றி
ஓம் முத்தே போற்றி வித்தே போற்றி
ஓம் முதுகுன்றமர்ந்த முனிவா போற்றி
ஓம் முந்தோய் போற்றி முக்கணா போற்றி
ஓம் முப்புரம் எரித்தாய் போற்றி போற்றி
ஓம் முருகவேள் தன்னைப் பயந்தாய் போற்றி 1130

ஓம் முருகன் பூண்டி முதல்வா போற்றி
ஓம் முல்லையங் கண்ணி முடியாய் போற்றி
ஓம் முழவின் முழக்கில் முகிழ்ப்பாய் போற்றி
ஓம் முழுநீறு புனைந்த மூர்த்தீ போற்றி
ஓம் முழுநீறு பூசிய மூர்த்தி போற்றி
ஓம் முழுவதும் இறந்த முதல்வா போற்றி
ஓம் முளையே போற்றி முத்தே போற்றி
ஓம் முறையே அருளும் முதல்வா போற்றி
ஓம் முன்பாகி நின்ற முதலே போற்றி
ஓம் முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி 1140

ஓம் முன்னியா நின்ற முதல்வா போற்றி
ஓம் மூக்கிச் சரத்து முதல்வா போற்றி
ஓம் மூலநோய் தீர்க்கும் முதல்வ போற்றி
ஓம் மூவர் இருவர் முதல்வா போற்றி
ஓம் மூவா நான்மறை முதல்வா போற்றி
ஓம் மூவா மேனி உடையாய் போற்றி
ஓம் மூவாத மேனி முக்கண்ணா போற்றி
ஓம் மூவாய் பிறவாய் இறவாய் போற்றி
ஓம் மூவுலகும் தாமாகி நின்றாய் போற்றி
ஓம் மூவேழ் சுற்றம் முரணுரு போற்றி 1150

ஓம் மெய்கிளரும் ஞான விளக்கே போற்றி
ஓம் மெய்சேரப் பால்வெண்ணீ றாடீ போற்றி
ஓம் மெய்ம்மையே ஞான விளக்கே போற்றி
ஓம் மெய்யடியார் உள்ளத்து வித்தே போற்றி
ஓம் மெய்யில் நின்ற ஐயா போற்றி
ஓம் மெய்யே நின்றெரியும் விளக்கே போற்றி
ஓம் மெய்வேள்வி மூர்த்திதலை யறுத்தாய் போற்றி
ஓம் மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
ஓம் மேல்வினை தீர்க்கும் முனிவ போற்றி
ஓம் மேல்வைத்த வானோர் பெருமான் போற்றி 1160

ஓம் மேலாடு திங்கள் முடியாய் போற்றி
ஓம் மேலை வினைகள் அறுப்பாய் போற்றி
ஓம் மேலை வினைகள் அறுப்போய் போற்றி
ஓம் மேலைக்காட்டுப் பள்ளியாய் போற்றி
ஓம் மேலோர்க்கும் மேலோர்க்கும் மேலாய் போற்றி
ஓம் மேலோர்கண் மேலார்கண் மேலாய் போற்றி
ஓம் மைசேர்ந்த கண்டம் உடையாய் போற்றி
ஓம் மொய்பவளக் கொடியனைய சடையாய் போற்றி
ஓம் யாரினும் இனியன் ஆனோய் போற்றி
ஓம் வக்கரை அமர்ந்த வரதா போற்றி 1170

ஓம் வங்கமலி கடல்நஞ்சம் உண்டாய் போற்றி
ஓம் வச்சிரத்தம்ப நாதா போற்றி போற்றி
ஓம் வஞ்சம் கடிந்து வாழ்த்துவோய் போற்றி
ஓம் வஞ்சர்க்கும் அருளும் வள்ளால் போற்றி
ஓம் வடகரை மாந்துறை வள்ளால் போற்றி
ஓம் வடகுரங்காடு துறையாய் போற்றி
ஓம் வடதிரு முல்லை வாயிலாய் போற்றி
ஓம் வடுகூர் அடிகள் மாணடி போற்றி
ஓம் வந்தனைந்து ஏத்துவார் வரமே போற்றி
ஓம் வந்தென்றன் சிந்தை உவந்தாய் போற்றி 1180

ஓம் வம்புலவு கொன்றைச் சடையாய் போற்றி
ஓம் வரமீந்து உதவும் வள்ளல் போற்றி
ஓம் வலஞ்சுழி மேவிய வரதா போற்றி
ஓம் வலம்புரம் மன்னிய வாழ்வே போற்றி
ஓம் வலிதா யம்உறை வள்ளால் போற்றி
ஓம் வலிவலம் வந்தருள் வரதா போற்றி
ஓம் வழித்துணை மருந்தே போற்றி போற்றி
ஓம் வளமார் அடியார் தம் உளமே போற்றி
ஓம் வள்ளலே போற்றி மணாளா போற்றி
ஓம் வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி 1190

ஓம் வன்பார்த்தான் பனங்காட்டூரா போற்றி
ஓம் வன்மீக நாதா போற்றி போற்றி
ஓம் வன்னிமதி சென்னிமிசை வைத்தோய் போற்றி
ஓம் வன்னியூர் மேவிய மைந்தா போற்றி
ஓம் வாசுகிமா நாணாக வைத்தாய் போற்றி
ஓம் வாட்போக்கி மலையுறை வாழ்வே போற்றி
ஓம் வாய்மூரடிகள் இன் மலர்ப்பதம் போற்றி
ஓம் வாராச் செல்வம் வருவிப்பான் போற்றி
ஓம் வாழ்வே போற்றி என் வைப்பே போற்றி
ஓம் வாழொளிபுத்தூர் வாழ்வே போற்றி 1200

ஓம் வான நாயகா போற்றி போற்றி...
ஓம் வான்அங்கத்தவர் தம் வளமே போற்றி
ஓம் வானகத் தமரர் தாயே போற்றி
ஓம் வானத்தார் போற்றும் மருந்தே போற்றி
ஓம் வான்பிறையும் வாளரவும் வைத்தாய் போற்றி
ஓம் வான்மியூ ரமர்ந்த வாழ்வே போற்றி
ஓம் வானவர் உய்ய நஞ்சுண்டாய் போற்றி
ஓம் வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி
ஓம் வானவர்கோன் தோள்துனித்த மைந்தா போற்றி
ஓம் வானாய் நிலனாய் நின்றாய் போற்றி 1210

ஓம் வானோர் வணங்கப் படுவாய் போற்றி
ஓம் வானோர்க்கு அரிய மருந்தே போற்றி
ஓம் விசய மங்கை வேதியா போற்றி
ஓம் விடையாய் போற்றி வெண்ணீற்றாய் போற்றி
ஓம் விடையேறி வேண்டுலகத்து இருப்பாய் போற்றி
ஓம் விண் துளங்க மும்மதிலும் எய்தாய் போற்றி
ஓம் விண்ணிழி வீழி மிழலையாய் போற்றி
ஓம் விண்ணும் மண்ணும் ஆனோய் போற்றி
ஓம் விண்ணுலகும் மண்ணுலகும் ஆனோய் போற்றி
ஓம் விண்மேலும் மேலும் நிமிர்ந்தாய் போற்றி 1220

ஓம் வித்தாய் அன்பு விதைப்பாய் போற்றி
ஓம் வியலூர் இருந்தருள் விமலா போற்றி
ஓம் விரிகடல் உலகின் விளைவே போற்றி
ஓம் விரிகதிரோன் சோற்றுத் துறையாய் போற்றி
ஓம் விரிசடைமேல் வெள்ளம் படைத்தாய் போற்றி
ஓம் விரிசுடராய் விளங்கொளியாய் நின்றாய் போற்றி
ஓம் விருந்திட்ட வரதா போற்றி போற்றி
ஓம் விரைசேர் சரண வித்தகா போற்றி
ஓம் விழவின் ஒலியை விரும்புவாய் போற்றி
ஓம் விழவொலி வேள்வியொலி ஆனோய் போற்றி 1230

ஓம் விளமர் உகந்த வித்தகா போற்றி
ஓம் விற்குடி வீரட்டம் மேயாய் போற்றி
ஓம் விற்கோலத்துறை வீரா போற்றி
ஓம் வீடுவார் வீடருள வல்லாய் போற்றி
ஓம் வெஞ்சமாக் கூடல் விகிர்தா போற்றி
ஓம் வெஞ்சினவெள் ஏறூர்தி உடையாய் போற்றி
ஓம் வெஞ்சுடரோன் பல்லிறுத்த வேந்தே போற்றி
ஓம் வெண்காடுகந்த விகிர்தா போற்றி
ஓம் வெண்டலையிற் பலிகொண்ட விகிர்தா போற்றி
ஓம் வெண்டுறை மேவிய வேதா போற்றி 1240

ஓம் வெண்ணிவாழ் விமலநின் மெல்லடி போற்றி
ஓம் வெண்ணெய்நல்லூருறை மேலோய் போற்றி
ஓம் வெண்பாக்கத்துறை விமலா போற்றி
ஓம் வெண்மதியங் கண்ணி விரும்பினை போற்றி
ஓம் வெய்யாய் தணியாய் அணியாய் போற்றி
ஓம் வெள்ளடையப்பா போற்றி போற்றி
ஓம் வெள்ளமொரு சடைமேல் ஏற்றோய் போற்றி
ஓம் வெள்ளி அம்பல ஆடலாய் போற்றி
ஓம் வெள்ளியம் பொருப்பின் விமலா போற்றி
ஓம் வெள்ளை நீற்றா போற்றி போற்றி 1250

ஓம் வெளியாய் இருப்பாய் போற்றி போற்றி
ஓம் வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி
ஓம் வெற்றியின் விளைவே போற்றி போற்றி
ஓம் வெற்றியே நல்கும் வீரா போற்றி
ஓம் வென்றிவேல் வேடனை வீட்டினோய் போற்றி
ஓம் வேட்கள நன்நகர் மேயாய் போற்றி
ஓம் வேட்டக் குடியின் மேயோய் போற்றி
ஓம் வேண்டுதல் வெறுப்பு வேண்டாய் போற்றி
ஓம் வேண்டுவ யாவும் தருவாய் போற்றி
ஓம் வேண்டுவார் வேண்டுவதே ஈவாய் போற்றி 1260

ஓம் வேதங்கள் வேள்வி பயந்தாய் போற்றி
ஓம் வேதி குடியுறை விஜய போற்றி
ஓம் வேதி போற்றி விமலா போற்றி
ஓம் வேதியா உண்மைப் பொருளே போற்றி
ஓம் வேலவன் தாதாய் போற்றி போற்றி
ஓம் வேலைவிடம் உண்டமணி கண்டா போற்றி
ஓம் வேழத் துரிவையும் போர்த்தாய் போற்றி
ஓம் வேழத்தின் உருவிரும்பிப் போர்த்தாய் போற்றி
ஓம் வேள்விக்குடி வளர் வேதா போற்றி
ஓம் வேளாத வேள்வி உடையாய் போற்றி 1270

ஓம் வேளூர் மேவிய வித்தகா போற்றி
ஓம் வேற்காட்டு வேத வித்தகா போற்றி
ஓம் வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
ஓம் வைகல் மாடக் கோயிலாய் போற்றி
ஓம் வைச்சாடல் நன்று மகிழ்ந்தாய் போற்றி
ஓம் வையகம் காக்கும் ஐயனே போற்றி 1276

திருச்சிற்றம்பலம்

சிவபெருமான் போற்றிகள் 1276 - பகுதி 1 - (1-300)

விருப்பம் :)